2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

“சிறுவன் மரணம்: பெண் காப்பாளருக்கு தகுதியில்லை”

Editorial   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 14 வயதான சிறுவன், விக்கெட் கம்புகள் மற்றும் தும்புத்தடியால் தாக்கி, படுகொலைச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த பாடசாலையின் பெண் காப்பாளருக்கு எவ்விதமான தொழில் தகுதியும் இல்லையென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (05) தெரிவித்தார்.

அந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த கீதா குமாரசிங்க, ​பெண் காப்பாளர், வீதியில் செல்லும் ஒருவரா? என தேடிப்பார்த்த ​போது, அவர் எந்தவொரு பரீட்சையிலும் சித்தியடையாதவர் என்றும் தொழில் தகுதி இல்லாதவர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு மிகவிரையில்,  பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை,  குறித்த சிறுவன் கடந்த புதன்கிழமை(29) அதிகாலை3.30 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீரின்  உத்தரவின் பிரகாரம் இன்று திங்கட்கிழமை (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .