2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சிறுமியின் குடும்பத்துக்கு உதவி

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

சமூக ஊடகங்கள் மூலம் சில குற்றச்செயல்கள் வெளிவந்தாலும் அதன்மூலம் பல நன்மையான விடயங்களும் நடைபெற்றே வருகின்றன.

அம்பாறை, அக்கரைப்பற்று பகுதியில் வறுமை நிலையில் உள்ள சிறுமி ஒருவர் வர்த்தக நிலையமொன்றில் களவு செய்ததாக கூறி, அந்த வர்த்தக நிலைய உரிமையாளரால் தாக்கப்பட்ட காணொளி, சமூக வலைத்தளங்களில் கடந்த வாரங்களில் பகிரப்பட்டுவந்தது.

அதனை தொடர்ந்து அச் சிறுமி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், தாக்கப்பட்ட சிறுமி தொடர்பான வறுமை நிலை தொடர்பிலும் சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்பட்டுவந்த நிலையில், சமூக ஊடகங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களால் சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களான தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள “வணக்கம் வாழ்க தமிழ்“ அமைப்பின் ஊடாக ஒரு தொகை பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மேற்படி அமைப்பின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் ஜனா மற்றும சஞ்ஜித் ஆகியோரின் ஏற்பாட்டில் சிறுமிக்கான வீட்டுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புலம்பெயர் நாடுகளில் வாழும் நிசாந்தன் மற்றும் அருண் ஆகியோரால் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உதவிப் பொருள்கள் சிறுமியின் பெற்றோரிடம் நேரடியாகச்சென்று வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X