2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறந்த முயற்சியாண்மையாளராக ஜெயராஜா

Editorial   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முயற்சியாண்மையாளருக்கான முதலாம் இடத்தை  உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர்  சா.ஜெயராஜா, கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில், திங்கட்கிழமை (21) நடைபெற்றது. 

விவசாய பிரதி பணிப்பாளர் வி.பேரின்பராஜாவின் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜெகம்பத், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துவண்டா,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே. கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும் என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “எதிர்காலத்தில் சேதனப் பயிர் உற்பத்தியை மேற்கொண்டு, அதன் தரத்தை பரிசோதனை செய்வதற்கு இரசாயன ஆய்வு கூடங்களை கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

“அதன்மூலம் விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியான அங்கிகாரம் கொண்ட சான்றிதழ்களை வழங்கவுள்ளோம். மேற்படி நடவடிக்கைக்காக 1,000 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இந்நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.

“மேலும், விவசாயிகள் தங்களது மண்ணின் தரம் மற்றும் சேதனப்பசளையின் தரத்தை உறுதி செய்ய ஆய்வு கூடங்கள் நிறுவப்படவுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .