A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}



வா.கிருஸ்ணா, எஸ்.சரவணன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (21/4) நினைவுகூரும் நிகழ்வும் விசேட வழிபாடுகளும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.
தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக உயிரிழந்தவர் களுக்காக பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இவ்விசேட வழிபாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,தாக்குதலில் காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையவும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீட்சிபெறவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.




1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025