2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

சிசுவின் சடலம் மீண்டும் நல்லடக்கம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பூநொச்சிமுனையில், கடந்த 11 தினங்களுக்கு முன்னர் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் ஜனாஸா,  பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டு, வியாழக்கிழமை(18) மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணொருவர், மேற்படி சிசுவை பிரசவித்துள்ளதுடன் சிசு உயிரிழந்த நிலையிலேயே பிறந்ததாகத் தெரிவித்து பிரதேசத்திலுள்ள பள்ளிவாயலின் உதவியுடன் பள்ளிவாயிலுள்ள மய்யவாடியில் சிசுவின் உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.

குறித்த குழந்தையின் ஜனாஸா சந்தேகத்துக்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 8ஆம் திகதி சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, சிசுவின் சடலம் நேற்று (18) மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X