Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 19 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் சிங்களவர்களை நாடாளுமன்றம், மாகாண சபைக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுவருவதாக, இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் சாடினார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களின் தேவைகள், அபிலாசைஷைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்விக்குறியெழுந்துள்ள நிலையில், மேய்ச்சல் தரைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது” என்றார்.
“இந்த மேய்ச்சல் தரை பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துவருகின்றது. நாங்களும் காந்திபூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தோம். ஆனால், ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்கள், பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
“ஊடகம் என்பதன் அர்த்தம் தெரியாதவர்கள்தான் இந்த முறைப்பாட்டைச் செய்து, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுமளவுக்கு வீடுகளுக்கும் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர். வீடுகளில் உள்ளவர்கள் கூட அச்சப்படும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“மேய்ச்சல் தரை நிலம் தொடர்பில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையானும் வியாழேந்திரனும் சரியான கவனம் எடுக்கவில்லையென கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago