2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

‘சாரா உயிருடன் இல்லையெனின் எனது கணவனை விடுவியுங்கள்’

Princiya Dixci   / 2021 ஜூலை 06 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன்

“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட “சாரா” என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சாராவை இந்தியாவுக்குத் தப்பியோட உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எனது கணவரான தேவகுமாரா விடுவியுங்கள்” என அவரது மனைவி டிலோஜினி கோரிக்கை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு, மாங்காடு பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் (04) ஊடக சந்திப்பொன்றை நடத்தியே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில், “எனது கணவரான தேவகுமாரை, “சாரா” என்ற புலத்தினியை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக சந்தேகத்தில் சிஜடியினரால் கடந்த வருடம் 7 மாதம் 11ஆம் திகதி வீட்டில் வைத்துக் கைது செய்தனர். 

“அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கொழும்பில் இருந்து கல்முனை நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி அழைத்துவந்து, மட்டக்களப்பு சிறையில் அடைத்துவைத்துள்ளதுடன்,  சட்டமா அதிபரிடம் இருந்து ஆவணம் வந்ததும் விடுவதாகத் தெரிவித்தனர்.

“ஆனால், அது தொடர்பாக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 

“அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சாரா உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது எனது கணவர்  செல்வராசா தேவகுமார் சாராவை இந்தியாவுக்கு தப்பியோட உதவி செய்தது என்பது எப்படி சாத்தியமாகும்?” என அவர் கோள்வியொழுப்பினார்.

அத்துடன், தனது கணவர் நிரபராதி என்றும் தனது 4 பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தி, அவரை விடுவித்து தருமாறு, அரசியல்வாதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .