2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சாணக்கியன் எம்.பியின் கண்காணிப்பு விஜயம்

Princiya Dixci   / 2021 மார்ச் 30 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட். பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி என்பவற்றுக்கு கண்காணிப்பு விஜயத்தை, நேற்று (29) செய்திருந்தார்.
 
அங்கு காணப்படும் பிரச்சினைகள், மக்கள் மற்றும் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வளப்பற்றாக்குறை என்பவற்றை இரா.சாணக்கியன் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், அப்பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை எவ்வாறு துரிதமாக மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு அவர் ஆராய்ந்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான திடீர் விஜயங்களை, மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் எம்.பி தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X