Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொத்துவில் - பொலிகண்டி போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் இடம்பெற்று வரும் விசாரணையின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியனிடம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 8 பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரால் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்கு வருகை தந்திருந்த 8 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டதாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (19) முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கிழக்கு மாகாணத்தில் மூதூர், வாழைச்சேனை, காத்தான்குடி கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் வருகை தந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாணக்கியனிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா?, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா?, கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டதாக சாணக்கியன் எம்.பி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பொத்துவில் - பொலிகண்டி மக்கள் பேரணியில் கலந்துகொண்டமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் ஆகியோரிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், பி.அரியநேத்திரன் ஆகியோரிட்மும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025