2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சர்வமத தலைவர்கள் சீயோன் தேவாலயத்துக்கு விஜயம்

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மதங்கள், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில், தேசிய சமாதான பேரவையின் சர்வமத தலைவர்கள் அடங்கிய குழுவினர், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு, நேற்று (09) மாலை விஜயம் செய்தனர்.

இதன்போது, 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதத்துக்குள்ளான சீயோன் தேவாலத்தை அவர்கள் பார்வையிட்டதுடன், தேவாலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர். 

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவிலுக்கும் சர்வமத தலைவர்கள் விஜயம் மேற்கொண்டனர் .  

சமாதான பேரவை முக்கியஸ்தர்களான கொரகொல்ல பியதிஸ்ஸ தேரர், மௌலவி எச்.எம் சித்தீக், எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி  உள்ளிட்ட சர்வமத தலைவர்களும் இவ்விஜயத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X