Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதி கிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளின் சங்கத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரில் 71க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளமையை ஆவணப்படுத்தும் வகையில், வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெறும் கையேட்டு நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணத்தால் தன்னால் பங்கு பெற முடியாமல் போயுள்ளதாக, அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இனி வருகின்ற காலங்களில் வருடங்கள் பல கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் நான் தளர்வடைய மாட்டேன் என்பதுடன், இப்போராட்டத்தை நீதி கிடைக்கும் வரையில் எக்காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன் என உறுதியாக கூறுகின்றேன் என்றும் சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.
பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகமே. ஆகையால், எமது போராட்டங்களை சர்வதேச பார்வைக்குக் கொண்டுவருவது எமது தலையாய கடமையாகும். எமது பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் அனைவரும் முன்னிற்க வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே, எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago