2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்கிறார்

Princiya Dixci   / 2022 மே 22 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தராகவும், மட்டக்களப்பு சனசமூக மத்தியஸ்த சபையின் பிரதி தவிசாளராகவும் கடமையாற்றும் வீரச்சந்திரன் குகதாஸன்,  உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாநாடு, எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் ஜுன் 03ஆம் திகதி வரை நெதர்லாந்தில் உள்ள திஹேக் நகரில் இடம்பெறவுள்ளது.  116 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்படி, வீ.குகதாஸன், நெதர்லாந்து பயணமாகவுள்ளார். சனசமூக மத்தியஸ்த சபையின் வினைத்திறன் சார் அனுபவப் பகிர்வையும், அதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் அவர் உரையாற்றவுள்ளார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிறப்பு பட்டதாரியும், சிறுவர் பாதுகாப்பு, உளவளத்துணை, ஆங்கிலம், கணினி ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கை நெறிகளையும், தொழில்வாண்மைசார் பயிற்சிகளையும் பெற்றவர் என்பதுடன், சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் அபிருத்திப் பரப்பில் சிரேஷ்ட முதுநிலை வளவாளரும் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .