2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மரநடுகை

Kogilavani   / 2021 மார்ச் 19 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருக்கோவில் பிரதேச கிளையின் ஏற்பாட்டில், சாகாமம் குளக்கரையில் மருத மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிலையப் பொறுப்பதிகாரி ரீ.கமலகாந்தனின் ஏற்பாட்டில், இன்று வெள்ளிக்கிமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாகவும் நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் எம்..ரீ.ஏ.வாவா, பிரதேச பொறியியலாளர் எம்.ஏ.நாஷர், பொறியியலாளர் பி.மையூரதாசன், பிராந்திய இரசாயனவியலாளர் எம்.எம்.எம்.சரீப்டீன், சமூகவியலாளர் எம்.எஸ்.எம்.சறூக், நீர்ச் சுத்திகரிப்பு நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பரமேந்திரன், தம்பிலுவில் நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X