2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சர்வகட்சித் தலைவர்களே விரைந்து செயற்படுங்கள்

Princiya Dixci   / 2022 ஜூலை 13 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

சர்வகட்சி தலைவர்களை விரைந்து செயற்படுமாறு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்கால நிலைமை தொடர்பில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வகட்சி ஆட்சி முறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்களிப்பை செய்வதாக இருந்தால், ஜனாதிபதியும், பிரதமரும் இராஜினாமா செய்வதோடு, இனப் பிரச்சினை தொடர்பாக எழுத்து வடிவில் ஒரு பொறிமுறையை அமுல்படுத்த வேண்டும்.

“மக்களின் போராட்டம் ஊடாக குடும்ப, கொடுங்கோல் மற்றும் ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்  பதவியை விட்டு விலக  வேண்டுமென  மக்கள் கிழந்தெழுந்த சூழலில், இராஜினாமாவை தாமதிப்பதென்பது, ஓங்கி ஓலித்த மக்கள் குரலுக்கு சவால் விடுக்கின்ற செயற்பாடாகும்.

“எனவே,  தாமதியாது  பதிவி விலகுவதோடு, மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாகவும், பிரதமரின் தனிப்பட்ட நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும், சர்வகட்சி அமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“மட்டுமல்லாமல், புதிய ஜனாதிபதியையும் பிரதமரையும் நியமித்து, அவர்களுக்கு விரைவாக செயல் வடிவம் கொடுக்குமாறும் சர்வ கட்சித் தலைவர்களை கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .