2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சம்பள முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை

Editorial   / 2021 நவம்பர் 07 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்

இலங்கை போக்குவரத்துச் சபையில் 5 வருட காலம் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் ஏனைய ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், க.பொ.த சாதாரண தர கல்வித் தகைமையற்ற ஊழியர்களுக்கு என்.வீகி.யு தகைமையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் போக்குவரத்துச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக வீதி திறப்பு விழா, சனிக்கிழமை (06) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்டார்.

இங்கு இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “எமது நாட்டிலுள்ள மின்சாரசபை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்ற சபைகள் மேம்பாட்ட நிலையில் இயங்குகின்றபோதிலும் போக்குவரத்துச் சபை மாத்திரம் கீழ் மட்டத்தில் காணப்படுகிறது.

“எனவே, அடுத்த ஒரு வருட காலத்துக்குள் போக்குவரத்துச் சபையையும் மேம்பாட்டு நிலைக்குக்கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

“விசேடமாக போக்கவரத்துச்சாலைகளுக்கான சட்ட திட்டங்கள் உருவாக்கப்படும்போது, சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் அமைய வேண்மெனக் கேட்டுள்ளேன்.

“காரணம் அவர்கள்தான் எமது நிறுவனத்துக்கு நிதியைக் கொண்டுவருபவர்கள். அதேபோன்று, அவர்கள் பயணிகளுடன் சுமுகமான உறவைப் பேணி நடக்க வேண்டும்.

“அதேபோல, புகை பரிசோதிக்கும் தற்போதைய முறையை மாற்றி புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .