Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் இன்று (11) திங்கட்கிழமை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்ட்களப்பு மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
எரிபொருள் வழங்கப்படாமையால் கடமைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரியும், அத்தோடு அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்குள் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உள்வாங்குமாறு கோரியும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லாததால் சமுர்த்தி வங்கிகளில் வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அத்துடன் சமுர்த்தி மகாசங்கத்தின் வேலைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மேலும், சமுர்த்தி அபிவிருத்தி அபிவிருத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாததால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விஷேட கொடுப்பனவு வழங்குவதிலும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago