Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 நவம்பர் 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று புதன்கிழமை மாலை (20) மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம் பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் ஊடகத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்ப பயிற்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு சிவில் சமூகத்தினர் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதிலளித்த தூதுவர் இது மிகவும் வரவேற்கத்தக்க விடையம் இதனை தான் முன்னின்று செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள் என பல அடங்குவதுடன், கல்வித்துறை, மருத்துவ துறை, தொழில் துறை, தொழில் பயிற்சி வழங்குதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் அபிவிருத்தி, மாணவர்கள் பாடசாலை இடைவிலகல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பான பல விஷயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது சீனத்தூதுவர் தற்போது இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்கியுள்ளதுடன் கொவிட் தொற்று பாதிப்புற்றிருந்த காலத்தில் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு தேவையான தடுப்பு ஊசி மருந்துகளை வழங்கியதாகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பல புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதும், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது கிழக்கு மாகாண மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டதையும், அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டதாகவும் இதன் போது தூதுவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த கலந்துரையாடலில் சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சீன தூதுவரினால் வியாழக்கிழமை(21) கையளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
15 minute ago
24 minute ago