Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 06 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், இ.சுதாகரன்
“அடிப்படைக் கொள்கையை நீக்கி, ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்த் தேசிய அரசியலாகும்” என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடக செயலாளரும், பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு என்பது தமிழரசுக் கட்சியின் கொள்கையாகவே இன்று வரை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஏன் பின்னடிக்கிறது என அவரிடம் இன்று (06) கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “சமஷ்டி அடிப்படையிலேயே, சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்து மூல ஆவணம் அனுப்பபட வேண்டுமே தவிர, அதனை வெட்டிக் குறைத்து, மாற்றம் செய்து அனுப்புவது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும்.
“கூட்டமைப்பு, ஜனநாய ரீதியாக 2009 க்குப் பின்னரும் 2010, 2015, 2020 ஆகிய பொதுத் தேர்தல்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையே வலியுறுத்தி வடகிழக்கு மக்களிடம் அதிகூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்த் தேசியக் கட்சியாக இன்று வரை உள்ளது.
“அந்தக் கொள்கையுடன் பயணிக்கும் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகவுள்ள தமிழரசுக் கட்சி, தற்போது பல தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுத்துமூல ஆவணம் வழங்கும்போது அடிப்படைக் கொள்கையை விட்டு, அதில் யாரையும் திருப்திப்படுத்துவதற்காக முக்கிய விடயங்களை நீக்கி, ஆவணம் தயாரிப்பது தவறு என்பதே தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
19 minute ago