Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 மே 31 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி சூடுபத்தினைசேனை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா உடல்களை அடக்கம் செய்ய முடியுமென பாதுகாப்புத் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
அத்துடன், சூடுபத்தினசேனை பகுதியில் வெள்ளிக்கிழமை வரை 301 உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 750 உடல்களை இங்கு அடக்கம் செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் உடல்களை சூடுபத்தினைசேனை பகுதியில் அடக்கம் செய்யப்படும் நிலைமைகள் தொடர்பில், பிரதேச மட்ட கலந்துரையாடல் சபை மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சூடுபத்தினைசேனையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்க செய்ய முடியாது என்று சிலர் போலியான பதிவுகளை பேஸ்புக்கில் இட்டு வருகின்றனர்.
“எனினும், அவ்வாறு அடக்கம் செய்ய முடியாது என்று நாங்கள் கூறவில்லை. இதனால் ஓட்டமாவடி பிரதேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் குழப்பத்தை உண்டு பண்ணும் செயலாக இது அமைகின்றது.
“இப்பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவு காணி உள்ளது. அத்தோடு, மேலும் கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான இடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்த வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago