Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு – மாவடிஓடை ஆற்றில் மூழ்கிய கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மீட்கப்பட்டுள்ளது .
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய முஸ்தபா முகமுது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசு மாட்டுப்பண்ணையொன்றில் சுமார் 15 வருட காலமாக, கூலித்தொழிலாளியாக கடமையாற்றிய குறித்த நபர் அங்குள்ள ஆற்றில் குளிப்பது வழக்கமாகக் கொண்டவர் எனவும் சம்பவ தினத்தன்று ஆற்றில் குளிக்கச்சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
திடீர்மரண விசாரணையதிகாரி எம்.எஸ். எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார் .
இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
எம். எஸ். எம். நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
49 minute ago
3 hours ago