Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஆளணி வெற்றிடங்களை நிறப்புவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து, கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு உதவுமாறு, கூட்டுறவு துறைசார் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில், 156 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில், 119 உத்தியோகத்தர்களே மாத்திரமே கடமையாற்றிவருகின்றனர். இதனால் 37 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நீண்டகாலமாக இருந்துவருகின்றன.
இப்பாரிய வெற்றிட குறைபாட்டால் வினைத்திறன்மிக்க கூட்டுறவு சேவையை பெறமுடியாதுள்ளதுடன், கூட்டுறவுத் துறைசார் நாளாந்த பணிகளையும் மக்கள் அடைந்துகொள்வதில் பல்வேறு சிரமங்களையும் எதிர் நோக்கி வருகின்றனர்.
2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் இதுவரை வழங்கப்படாமையே, இவ்வெற்றிட அதிகரிப்புக்கு காரணமாகவுள்ளது.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன்படி, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 1,534 கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு, செயற்பட்டு வருகின்றன.
இச்சங்கங்களுக்கான கணக்காய்வு, அபிவிருத்திக் கடமைகளை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி ஆளணி வெற்றிடம் காரணமாக, கூட்டுறவு சங்கங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமடைவதுடன், குறித்த உத்தியோகத்தர்களுக்கான வேலைப்பழுவும் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே, கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், வேலையற்ற பட்டதாரிகள் அல்லது தகைமையுடைய இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமெனக் கோரப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago