2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஹசனலியுடன் பேச்சு

Editorial   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசனலிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு, ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் கூட்டமைப்பு சார்பாக இதில் பங்கெடுத்தனர்.

மாலை 5 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவது, இரு இனங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு இணக்கத் தீர்வு எட்டுவது தொடர்பில் ஆராயப்பட்டது.

இரு தரப்பினரும் விரைவில் மீண்டும் சந்தித்துப் பேசுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .