Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 24 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 6,500 தடைவைகள் குருதி சுத்திகரிப்புச் செய்துள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, மூன்றாண்டுகள் நிறைவடைவதையொட்டிய வைபவம், வைத்தியசாலையில், இன்று (24) நடைபெற்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகளில் 150 சிறுநீரக நோயாளர்களுக்கு 6,500 தடைவைகள் குருதி சுத்திகரிப்புச் செய்துள்ளதுடன், 2,500 தடைவைகள் ஊசிமருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஆரையம்பதி போன்ற பிரதேசங்களிலிருந்து சிறுநீரக நோயாளர்கள் குருதி சுத்திகரிப்புக்காக இங்கு வருகை தருவதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago