Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 06 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில், தொடர்ந்தும் வைத்தியசாலைகளிலே தங்கவைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்களை, அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியின் விசேட கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை, நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை, இக்காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் மற்றும் அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு, தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குணமடைந்து சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்பப்படுவோருக்கான போக்குவர வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன.
வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட கொவிட் 19 நோயாளர்கள் சிலர், சிகிச்சை முடிந்த போதும் போக்குவரத்து வசதி இன்மையால் அவர்கள் தொடர்ந்து அந்தந்த வைத்தியசாலையிலேயே இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
இதனால் எமது மாவட்டத்தில் இனங்காணப்படுகின்ற நோயாளிகளை இங்கு அனுமதிப்பதிப்பதற்கு முடியாதுள்ளமை தொடர்பாக மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்தவிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவிதார்.
இதனையடுத்து, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அந்நோயாளர்களை கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் போன்ற அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாக கூறியிருந்தார் எனவும் தெரிவிதார்.
இவர்கள் சென்றதன் பின்னர் கறடியனாறு, கல்லாறு மற்றும் காத்தான்குடி போன்ற வைத்தியசாலைகளிலே போதியளவு கட்டில்கள் காணப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago