Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 24 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் (வயது 32) என்பவரே, இன்று (24) இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர், வத்தவப் பழப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர்.
தன்னுடைய தோட்டத்துக்கு மின்சார சபையில் முறையாக மின்சாரம் பெற்றிருந்த நிலையில், தோட்டத்துக்குள் பன்றி மற்றும் காட்டு மிருகங்கள் வருவதால் அவற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக முறையற்ற விதத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறையற்ற விதத்தில் மின்சாரத்துடன் கம்பி இணைக்கப்பட்டதால் மின்சாரம் தாக்கி, இவ் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்க்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago