Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 நவம்பர் 01 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சந்திவெளி பொலிஸ் நிலையத்தில், குடும்பத் தகராறு சம்பந்தமான முறைப்பாடுகளே மிக அதிகளவில் பதிவாவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுப் பாவனையே இதற்குப் பிரதாக காரணமாக உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பிரதேசத்தில், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவினால் கடந்த வியாழக்கிழமை (28) புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து அடுத்து வந்த இரு தினங்களில் 31.10.2021 வரை சிறு குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகள் குடும்பத் தகராறுகள் விடமயாக 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கசிப்பு காய்ச்சுதல் விற்றல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 முறைப்பாடுகளுக்கமைவாக மூவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
30 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சேவையைத் தொடங்கியுள்ள இப்புதிய சந்திவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக எம். சுதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் சேவையாற்றப்பட்டு வந்த நிலையில், சந்திவெளி என பிரிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம், 12 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 33 ஆயிரம் மக்களுக்கு சேவை வழங்கி வருவதாக என்று ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ கே. ஜயந்த தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
8 hours ago