Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
“சுரகிமு கங்கா” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் ஆறுகளைக் காப்போம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் எம். சிவகுமார் தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சால் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம், அமைச்சுக்களுக்கிடையிலான தேசிய முன்னெடுப்புக் குழுவால் அமுலாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் “சுரகிமு கங்கா” தேசிய லேவைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்கூட்டம், மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.
அங்கு இத்திட்டம் குறித்து தெளிவூட்டலை வழங்கிய பணிப்பாளர் சிவகுமார் தெரிவிக்கையில், “இதை தங்குதிறனுள்ள நீண்டகாலத் நிகழ்ச்சித்திட்டமாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மாவட்ட ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாவட்டச் செயலாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்தக் கலந்துரையாடலில், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மத்திய சுற்றாடர் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி, விவசாயம், கால்நடை, சமுர்த்தி, நீர்ப்பாசனம், தேசிய நீர் வழங்கல், காணிப்பயன்பாடு, சுகாதாரம், கல்வி, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவம், சிவில் பாதுகாப்பு போன்ற பிரிவுகளின் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025