Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 18 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக, விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணப் பாடசாலைகளைத் தயார்படுத்தும் பொருட்டு, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், பாடசாலைகளுக்கு நிதி வழங்கியுள்ளது.
இந்நிதிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலைகளுக்கான இந்த நிதிகள், சம்பந்தப்பட்ட 17 வலயக் கல்வி அலுவலகங்களினூடாக, கிழக்கு மாகாண பாடசாலைகளின் வங்கிக் கணக்குக்கு தனித்தனியாக வைப்பிலிடப்பட்டுள்ளன.
இதனால், கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 457 ஆரம்பப் பாடசாலைகளும், 657 இரண்டாந்தரப் பாடசாலைகளும் நன்மையடைந்துள்ளன. பாடசாலைகளுக்கு தலா 1,250 ரூபாய் முதல் 16,000 வரை ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளைத் தயார்படுத்துவது தொடர்பில், கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம், வழிகாட்டல், ஆலோசனைகளுக்கு அமைய, நீர், கைகழுவும் திரவம், ஏனைய சுகாதாரத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக குறித்த நிதிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கையில், கைகளைக் கழுவதற்காக சவர்க்காரத்திரவம் பயன்படுத்துவதோடு, பாடசாலைச் சூழல் தொற்று நீக்கம் செய்யப்படவேண்டுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago