2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கிழக்கில் கொரோனா 2,000ஐ தாண்டியது

Princiya Dixci   / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில்  கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியுள்ளது. இன்று (19) வரை 2,005 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கல்முனைப் பிராந்தியத்தில் 1,000 ஐ தாண்டி, 1,051 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரில் தலா 4 பேரும் செங்கலடியில் ஒருவருமாக 9 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் இதுவரை சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, உகனை, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 12 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

மேலும் கிழக்கில் உயர் கொரோனா அபாய பிரதேசங்களாக ஏழு பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிண்ணியா, கல்முனை தெற்கு, திருகோணமலை, உப்புவெளி, காரைதீவு, காத்தான்குடி, அம்பாறை ஆகிய பிரதேசங்களே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஆகக் குறைந்த கொரோனாத் தொற்றாளர்கள் 88 பேர் அம்பாறை சுகாதாரப் பிரிவிலும் ஆகக் கூடிய தொற்றாளர்கள் 1051 பேர் கல்முனை சுகாதாரப் பிரிவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .