Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 26 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன், மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அரசார்பற்ற ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.பாரதிதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், கிரான், ஏறாவூர்ப்பற்று, வவுணதீவு,வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் கால்நடைகளை வைத்துள்ள கால்நடை பண்ணையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தச் செயலமர்வின்போது கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதனால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணிகள் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அத்துமீறி பயிர்செய்கை மேற்கொள்வதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதில் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எனவே அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து தமது பிரச்சினைக்கு தீர்வைப்பெற்றுத்தர முன்வரவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago