2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் மேலும் 7 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 6 பேருக்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் காத்தான்குடியிலுள்ள தனியார் வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் என 15 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகன் மற்றுமொரு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .