2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் அன்டிஜன் பரிசோதனை துரிதம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், சகா, எம்.எஸ்.எம்.ஹனீபா

காத்தான்குடியில் 147 பேருக்கு, நேற்று (02) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தொற்று நோயியல் வைத்திய அதிகாரி டொக்டர் குணசேகரத்தின் வழிகாட்டலில், காத்தான்குடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆசாத் ஹசனின் தலைமையில், புதிய காத்தான்குடி, பரீட் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. 

ஏற்கெனவே தொற்றாளர்களாக என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் இவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவு ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு துரிதாக அன்டிஜன் கொவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அன்டிஜன் பரிசோதனைக்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், காத்தான்குடி பிரதேசத்தல் இராணுவத்தினரும் பொலிஸாரும் அதிகளவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (03) 1,250 எட்டியுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .