2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி வீடொன்றில் தீ பரவல்

Princiya Dixci   / 2021 மார்ச் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் வீடொன்றில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீட்டின் உபகரணங்களும் உடமைகளும் எரிந்து சேதமடைந்துள்ளன.

காத்தான்குடி, முதலாம் குறிச்சி, மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் குடும்பத்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3.30 மணியளவில் வீட்டினுள் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து, உறக்கத்திலிருந்து எழும்பி, அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இதனால் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு, சலவை இயந்திரம் உட்பட வீட்டு உப கரணங்கள் மற்றும் வீட்டாரின் உடமைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

ஸ்தலத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X