2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

காத்தான்குடி முழுமையாக விடுவிப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 4 வீதிகள், இன்று (01) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காத்தான்குடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, டெலிகொம் வீதி-முதலாம் குறுக்கு தெரு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம்  காரணமாக 31.12.2020 முதல் காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்டு இரு கட்டங்களாக விடுவிக்கப்பட்டு, மேற்படி 4  வீதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X