2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

காத்தான்குடி தபாலகம் 2 நாள்களுக்கு மூடப்பட்டது

Freelancer   / 2021 ஜூன் 29 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்  

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக இன்றும், நாளையும் (29,30) மூடப்பட்டுள்ளது.

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் நேற்று (28)  மேற்கொள்ளப்பட்டன.

இதில் மற்றுமொரு ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஓரிரு தினங்களில் பி.சி.ஆர் அறிக்கைகள் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் தபாலக ஊழியர்கள் அவசியமான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதாக  தெரிவித்தனர்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .