2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

காணிகளை அளக்கும் வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் காணிகளை அளவிடும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பலர் உறுதிகள் வழங்கப்படாத நிலையில் மிக நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.

அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு, உறுதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நில அளவைகள் திணைக்களத்தால் அரச நில அளவையாளர் எம்.ஐ.சபீரின் தலைமயிலுள்ள குழுவினர்,இவ்வாறு நில அளவை திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X