2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்த்தர் மரணம்

Mayu   / 2024 நவம்பர் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(10) இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச்  சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான கார்த்திகோசு உருத்திரகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோது காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X