Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும் அம்பாறை மாவட்டத்துக்குட்பட்டதுமாக உகன பிரதேசத்துக்குட்பட்ட கலப்பிட்டிகல கிராமத்துக்குள் இன்று (25) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும் தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இவ்வாறு புகுந்த காட்டுயானைக் கூட்டத்தால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்.
கிராமத்துக்குள் யானைக்கூட்டம் புகுந்ததை அவதானித்த மக்கள், மிகுந்த அச்சத்துடன் யானைக் கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சி செத்துள்ளனர். எனினும், அங்கிருந்த வேளாண்மை, தென்னை, வாழை, பலா, மா, மரவெள்ளி உள்ளிட்ட தோட்டங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு, யானைக்கூட்டம் வெளியேறியுள்ளது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு, அம்பாறை மவாட்டங்களின் எல்லைப் புறங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025