2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

Freelancer   / 2023 நவம்பர் 26 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளக்கல்மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் கரடியனாறு பிரதேச  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  சம்பவம் சனிக்கிழமை (25)  இடம்பெற்றுள்ளது.  

இச்சம்பவத்தில் இலுப்படிச்சேனை,  வேப்பவெட்டுவான் வீதியை  சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய கந்தையா கீர்த்திகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். . 

மாடு மேய்க்கச் சென்று  மோட்டார் சைக்கிளில்  வீடு திரும்பும் வேளையில் காட்டு யானை வழிமறித்துத்தாக்கியுள்ளதாகவும்

ஒருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்  

மேலும்  சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .