2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

களுவாஞ்சிக்குடி பொலிஸில் ஒருவருக்கு கொரோனா

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தபோதே இவருக்கான தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது என  மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .