2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கரையொதுங்கிய மர்ம பொருள் ; இளைஞன் வைத்தியசாலை அனுமதி

Janu   / 2025 மார்ச் 04 , பி.ப. 05:38 - 0     - 25

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேச கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய  மர்ம பொருள் ஒன்றை கண்டெடுத்த நிலையில் அது  வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம்  திங்கட்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

திருநீற்றுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவ தினத்தன்று மாலை  குறித்த கடலில் நீராடச் சென்றபோது அங்கு கரையொதுங்கி இருந்த மர்மபொருளை கண்டெடுத்து அதில் இருந்த நூலை இழுத்த நிலையில் அது வெடித்ததில்  25 வயதுடைய வரதராஜன் கவிந்துஜன் என்ற இளைஞன்  படுகாயமடைந்து  மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குண்டை    விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பரிசோதித்ததில் இது வெளிச்ச குண்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ரீ.எல் . ஜவ்பர்கான்,கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X