Freelancer / 2023 ஜூன் 12 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.ஏல்.ஜவ்பர்கான், எச்.எம்.எம்.பர்ஸான்
ஏறாவூ பொலிஸ் பிரிவு புன்னக்குடா கடலில் நேற்று (11) காலை 09.45க்கு கரையொதுங்கிய சடலம், சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் தளவாயை பகுதியைச் சேர்ந்த தங்கராசா விஜயன் (வயது 45) என மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், சடலத்தை பார்வையிட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைத்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (10) காலை 06 மணியளவில் சவுக்கடி கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிய போது, சவுக்கடி கடலில் தொழிலுக்கு சென்று அன்று மதியம் 12 மணிக்கு கரைக்கு வந்துவிட்டதாவும், அதன் பின்னர் பிற்பகல் 01 மணியளவில் புன்னக்குடாவில் இவரை கண்டதாகவும் பலரும் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
மது போதைக்கு அடிமையான இவர், இரு திருமணம் முடித்திருந்தும் இரு மனைவிகளையும் விட்டுப் பிரிந்து தாய் வீட்டிலேயே பல வருடமாக வசித்து வந்திருக்கிறார். (N)
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025