Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 22 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா, மற்றும் பிள்ளையான் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் கைச்சாத்திட்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் மேற்கொண்டு 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கூட்டமைப்பு உருவாக்கி, அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி சைச்சாத்திடப்பட்டது.
இதனையடுத்து நடக்க இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
8 hours ago
22 Mar 2025