2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கம்பியில் சிக்கிய யானைக் குட்டி மீட்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 07 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

காட்டுப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த யானைக் குட்டியை பெரும் சிரமத்துக்கு மத்தியில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியில் வைத்தே ஒரு வயது நிரம்பிய இந்த யானைக்குட்டி நேற்று (06) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டாரவின் வழிகாட்டலில், திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்ட அதிகாரி நாகராஜ் சுரேஸ்குமார் தலைமையிலான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த யானைக் குட்டியைக் காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட யானைக் குட்டியை, அம்பாறை மாவட்ட மிருக வைத்தியதிகாரி எம்.புஸ்பகுமார உடனடி வைத்திய உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து, அம்பாறை வனவளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு யானைக் குட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .