Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 20 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
பிபிலை பகுதியைச் சேர்ந்த இளைஞனின் பணப்பையை கண்டெடுத்த தோப்பூர் நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் போது வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி கண்டெடுத்திருந்தார்.
அந்த பணப் பையில் 19,560 ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் காணப்பட்டிருந்தன.
இதில் அவரை தொடர்பு கொள்வதற்கான எதுவித தொலைபேசி இலக்கங்களும் இருக்கவில்லை. அப்பையில் அவரது ஆவணங்கள் இருந்தமையால் அதனை ஆதாரமாக வைத்து பணப்பையை கண்டெடுத்த நபர் சமூக வளைத்தளங்களில் உரியவருக்கு தகவல் சேரும்படியாக பதிவொன்றை இட்டிருந்தார்.
இந்த பதிவினை பணப்பையை தொலைத்த நபர் பார்வையிட்டு உரிய நபரை தொடர்பு கொண்டு தனது பணப் பையை இன்று வியாழக்கிழமை (20) காலை பெற்றுக் கொண்டதோடு கண்டெடுத்து உதவிய நிஜாமுதீனுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
தோப்பூர் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜெஸாகிர் (சலீம்) ஊடாக குறித்த பணப்பையும், ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பணப்பையை தொலைத்த நபர் பிபிலைப் பகுதியைச் சேர்ந்த செனவிரத்ன முதியன்சலாகே சதுரங்க குமார என்பது குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .