2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கட்சிக்கு எதிராக செயற்பட்டதால் பதவியிழந்தார் ரெபுபாசம்

Editorial   / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் ரெபுபாசத்தை, கட்சியிலிருந்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீக்கியுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ரெபுபாசம்,  பட்டியல் ஆசனத்தினூடாக ஏறாவூர் நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

நகர சபைத் தவிசாளர் தெரிவின் போது, கட்சியினுடைய தீர்மானத்தை புறக்கணித்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதால், அவருக்கெதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டது.

மேற்படி ஒழுக்காற்று விசாரணைகளின் தீர்ப்பையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு,  அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து, கட்சியில் இருந்தும் வெளியேற்றியுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மற்றுமோர் உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் என்பவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டதால், அக்கட்சி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, அவரது உறுப்புரிமையையும் இரத்துச் செய்து கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது.

இதன்படி, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதய பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்குறித்த உறுப்பினர்களின் பதவிகள் நீக்கப்பட்டமை குறித்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .