2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடற்படை வீரர்கள் ஐவருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மார்ச் 15 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனை முன்னெடுத்துவரும் நிலையில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த குறித்த 5 வீரர்களுக்கும் முன்னெடுக்கப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று (14) அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 812 கொரோனா வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன், 731 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 73 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X