2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கசிப்புடன் பெண் உட்பட இருவர் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 10 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி போலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரியம்பதி கிறான் குளத்தில் கசிப்பு போதை பொருளுடன் 31 வயது பெண் உட்பட 48 வயது ஆணுமாக இருவர் ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்தனர்.

கிரான் குளம் செல்லத்தம்பி வீதியில் உள்ள இரு வீடுகளில் கசிப்பு போதை பொருளை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே இவர்கள் போலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

31 வயதுடைய பெண்ணிடமிருந்து 24 ,750 மில்லி லிட்டர் கசிப்பும் 48 வயதுடைய ஆண் ஒருவரின் வீட்டில் இருந்து 23, 250 ml கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  கைதான இருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி போலிஸார் தெரிவித்தனர்.

எல் ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X