2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில், மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கசிப்பு விற்பனை நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7,500 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .