Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம், மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இன்று (03) அதிகாலை முற்றுகையிடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையை முன்னெடுத்தனர்.
முறக்கொட்டாஞ்சேனை ஆற்றுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த இந்தப் பாரியளவில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை, இயந்திரப்படகு மூலம் சென்று முற்றுகையிட்டனர்.
இதன்போது 4 பரல்களில் கசிப்பு காய்ச்சுவதறக்காக வைக்கப்பட்டிருந்த 08 இலட்சத்து 40 மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், 01 இலட்சத்து 65 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய தோணியும் மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
51 minute ago